ஒலிம்பிக்கில் சாதித்த இந்தியாவின் சுதிர்தா முகர்ஜி.. அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்...

 டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை சுதிர்தா முகர்ஜி கடும் போராட்டத்திற்குப் பின் வெற்றி பெற்றார்.

இந்த போட்டியில் சுதிர்தா முகர்ஜி சுவீடனைச் சேர்ந்த லிண்டா பெர்க்ஸ்ட்ராமை முதல் சுற்றில் எதிர்கொண்டார். தொடக்கம் முதலே இப்போட்டி கடும் சவால் நிறைந்ததாக இருந்ததால் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. முதல் செட்டை 5-11 என சுகிர்தா இழக்க 2வது செட்டை 11-9 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

3வது செட்டை 11-13 எனவும், 9-11 எனவும் இழந்து சுதிர்தா முகர்ஜி 1-3 என பின்தங்கினார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட அவர் 11-3, 11-9, 11-5 என அடுத்த 3 சுற்றுகளையும் கைப்பற்றி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்