Video: அடிக்கிற அடியில்.. ஒரே ஓவரில் 43 ரன்கள் - மோசமான சாதனை படைத்த பிரபல பவுலர்!

Cricket England Cricket Team England Sports
By Jiyath Jun 27, 2024 10:08 AM GMT
Report

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் 'ஆலி ராபின்சன்' மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

பறந்த பவுண்டரிகள் 

இங்கிலாந்தில் உள்ளூர் போட்டியான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில், sussex - leicestershire அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. முதல் இன்னிங்க்சில் சசக்ஸ் அணி 442 ரன்களும், எதிரணி 275 ரன்களும் எடுத்திருந்தன. இரண்டாவது இன்னிங்க்சை ஆடிய சசக்ஸ் அணி 296 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

Video: அடிக்கிற அடியில்.. ஒரே ஓவரில் 43 ரன்கள் - மோசமான சாதனை படைத்த பிரபல பவுலர்! | Sussexs Ollie Robinson Was Struck For 43 Runs

இந்நிலையில் 464 என்ற வெற்றி இலக்குடன் leicestershire அணி களமிறங்கியது. அப்போது சசக்ஸ் அணி வீரர் ஆலி ராபின்சன் 59 வது ஓவரை வீசினார். அப்போது பேட்டிங் செய்த லுயிஸ் கிம்பர், நோ-பால்களுடன் சேர்த்து ராபின்சன் வீசிய 9 பந்துகளில் 2 சிக்சர்கள், 6 பவுண்டரிகளை பறக்கவிட்டார்.

'மூளையை யூஸ் பண்ணனும்' - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ரோஹித் ஷர்மா பதிலடி!

'மூளையை யூஸ் பண்ணனும்' - பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு ரோஹித் ஷர்மா பதிலடி!

மோசமான சாதனை 

கடைசி பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்தார். கவுன்ட்டி கிரிக்கெட் விதிப்படி நோபால்களுக்கு 2 ரன்கள் வழங்கப்படுகிறது. இதனால் 3 நோபால்களுக்கு 6 ரன்கள் என்ற கணக்கில் மொத்தம் 43 ரன்கள் leicestershire அணிக்கு அந்த ஓவரில் கிடைத்தது.

Video: அடிக்கிற அடியில்.. ஒரே ஓவரில் 43 ரன்கள் - மோசமான சாதனை படைத்த பிரபல பவுலர்! | Sussexs Ollie Robinson Was Struck For 43 Runs

இதனால், கவுன்ட்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரில் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தவர் என்ற மோசமான சாதனையை ஆலி ராபின்சன் நிகழ்த்தியுள்ளார். மேலும், இந்திய ஜாம்பவான்களான விராட் கோலி, ரோகித் சர்மாவை 3 முறை விக்கெட் எடுத்த அவருக்கு இந்த நிலைமையா என ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.