பாலியல் புகாரில் சிக்கிய டிஜீபியை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சிறப்பு டிஜீபி ஒருவர் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக புகார் கொடுக்க பெண் எஸ்பி அதிகாரி சென்னை வந்து கொண்டிருந்த போது அவரை சிறப்பு டிஜீபியின் உத்தரவின் பேரில் செங்கல்பட்டு எஸ்.பி தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.
அதனையும் மீறி பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி சிறப்பு டி.ஜீ.பி மீது புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது உயர்நீதிமன்றம். மேலும் இந்த வழக்கின் விசாரணையை மேற்பார்வையிடுவோம் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு எஸ்.பியை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் அமைத்துள்ளது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. செங்கல்பட்டு எஸ்.பியை சஸ்பெண்ட் செய்துள்ள நிலையில் சிறப்பு டி.ஜீ.பியை சஸ்பெண்ட் செய்யாயது ஏன் என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அந்த சிறப்பு டி.ஜீ.பி அவ்வளவு அதிகாரம் படைத்தவரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பெயர்களை ஊடகங்களில் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கில் முறையாக விசாரணை நடக்கும் என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்யும் என்றும் தெரிவித்திருந்தனர்.