நீண்ட மீசை வைத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் - அதிரடி நடவடிக்கை

Suspend Constable Driver
By Nandhini Jan 10, 2022 04:19 AM GMT
Report

நீண்ட மீசை வைத்திருந்ததற்காக மத்திய பிரதேச கான்ஸ்டபிள் டிரைவர் ராகேஷ் ராணா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கான்ஸ்டபிள் ராகேஷ் ராணா. இவர் போலீஸ் மோட்டார் டிரான்ஸ்போர்ட் பிரிவில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு பெரிய மீசை வைப்பது ரொம்ப ஆசை. ஆனால், காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கிறது.

தலைமுடி வளர்ப்பதில், உடை அணிவதிலும் கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படும். ஆனால், ராகேஷ் ராணா அது பற்றி கவலைப்படாமல் நீண்ட தலைமுடி, பெரிய மீசையுடன் வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.

இதனையடுத்து, தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டுமாறு கான்ஸ்டபிள் ராகேஷ் ராணாவுக்கு காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், ராகேஷ் ராணா தலைமுடி மற்றும் மீசையை முறையாக வெட்டவில்லை. இதனால், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னுடைய மீசையை சரியான அளவில் வெட்டும்படி என்னிடம் கூறினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். இதற்கு முன் நான் பணியில் இருக்கும்போது யாரும் இப்படி என்னிடம் சொன்னது கிடையாது என்று ராகேஷ் ராணா கூறினார்.