திடீர் மரணம்...!! இயக்குனர் சுசி கணேசன் வீட்டில் நடைபெற்ற சோகம்..!!
இயக்குனர் சுசி கணேசனின் மாமனாரும், முன்னாள் மாவட்ட ஆட்சியரான சண்முகவேலு உடலநல குறைவால் காலமாகியுள்ளார்.
சுசி கணேசன்
2002-ஆம் ஆண்டு பிரசன்னா, கனிகா போன்றோர் நடிப்பில் வெளியான "5 ஸ்டார்" படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுசி கணேசன். முதல் படமே பெரும் வெற்றியை மட்டுமின்றி அவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருதையும் பெற்றுக்கொடுத்தது.
அதே ஆண்டில் வெளியான விரும்புகிறேன் படமும் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குனர், சிறந்த படம் போன்ற விருதுகளை வென்று கொடுத்தது. இந்த படத்தில் பிரஷாந்த் மற்றும் சினேகா நடித்திருந்தினர்.
அதனை தொடர்ந்து 2006-ஆம் ஆண்டு வெளியான திருட்டுப்பயலே படமும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி மிக பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தது. அந்த ஆண்டில் வெளியான படங்களில் அதிக வசூலித்த 3-வது படமாக திருட்டுப்பயலே உயர்ந்தது. அந்த படமும் தமிழக அரசின் விருதில் சிறந்த படத்திற்கான பட்டியலில் 3-வது இடத்தை பிடித்தது.
பின்னர் 2009-ஆம் ஆண்டு விக்ரம், ஷ்ரேயா நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கந்தசாமி படமும் நல்ல வசூலை பெற்றது. பெரிய இயக்குனராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்படங்களுக்கு பிறகு, அவரின் கரியர் கிராஃப் பெரிதாக வளரவில்லை.
மாமனார் மரணம்
நடுவில் திருட்டுப்பயலே 2 படத்தையும் அவர் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா நடிப்பில் இயக்கியிருந்தாலும், அந்த படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெற தவறியது. சுசி கணேசனின் மனைவி மஞ்சரியின் தந்தையான சண்முகவேலு திண்டுக்கல் மாவட்டத்தில் டெபுடி கலெக்டராக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.
85 வயதாகும் இவர், கடந்த சில வருடங்களாகவே வயது மூப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை எடுத்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்துள்ளார்.