நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு - அதிர்ச்சி தகவல்
நடிகை சுஷ்மிதா சென் சில நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
சுஷ்மிதா சென்
18ஆம் வயதில், 1994ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வென்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகை சுஷ்மிதா சென். தஸ்டக் எனும் இந்தி படத்தின் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார். பாலிவுட்டில் அமிதாப் தொடங்கி ஷாருக்கான், அக்ஷய் குமார் என டாப் ஹீரோக்களுடன் வலம் வந்தவர்.
இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ஆர்யா சீரிஸ் மூலம் கவனம் பெற்றார். இந்நிலையில், தனக்கு இரண்டு நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டதாக பகிர்ந்துள்ளார். அதில், இரண்டு நாட்களுக்கு முன் எனக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டது.
மாரடைப்பு
இதயத்தில் ஸ்டெண்ட் பொருத்தப்பட்டது. ‘எனக்கு பெரிய இதயம் இருக்கிறது’ என்று எனது இருதயநோய் நிபுணர் உறுதிப்படுத்தியுள்ளார். சரியான நேரத்தில் உதவிய பலருக்கும் நான் நன்றி தெரிவிக்க வேண்டும், மற்றொரு பதிவில் அதை தெரிவிக்கிறேன்.
நான் நன்றாக இருக்கிறேன் எனும் நல்ல செய்தியைத் தெரிவிப்பதற்காகவே தற்போது இந்தப் பதிவை பகிர்ந்துள்ளேன். நான் மறுபடி வாழத் தயாராக இருக்கிறேன்” எனப் தெரிவித்துள்ளார். இச்செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.