லலித் மோடியுடன் டேட்டிங்... உண்மையை உடைத்த சுஷ்மிதா சென்... - வைரலாகும் புகைப்படம்

By Nandhini Jul 16, 2022 11:13 AM GMT
Report

லலித் மோடி

ஐபிஎல் முன்னாள் தலைவரான லலித் மோடி, சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் 'என் வாழ்வில் ஒரு புது அத்தியாயம் தொடங்கியுள்ளது. சுஷ்மிதாவை காதலிக்கிறேன் என்றும், காதல் என்பதால் கல்யாணம் ஆனது என்பது அல்ல. ஆனால், ஒரு நாள் அதுவும் நடக்கும். இப்போது நாங்கள் ஒன்றாக டேட்டிங்கில் இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.

தற்போது, இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் தீயாய் பரவி வருகிறது.

சுஷ்மிதா சென் பதிவு

இச்செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதில், தனது இரு மகள்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், "நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் ஆகவில்லை. மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை. எல்லையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன். தேவையான விளக்கத்தை அளித்துவிட்டேன். இப்போது என் வாழ்க்கை மற்றும் வேலைக்கு செல்லப்போகிறேன். எனது மகிழ்ச்சியை பகிர்ந்தவர்களுக்கு நன்றி. அப்படி செய்யாதவர்களுக்கு இது தேவையில்லாத ஒன்று" என்று பதிவிட்டுள்ளார்.   

Sushmita Sen