என் தாயை இழுக்காதீங்க - உதயநிதியின் கருத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் மகள் கண்டனம்

dmk bjp udayanidhi Sushma Swaraj
By Jon Apr 02, 2021 12:01 PM GMT
Report

 சுஷ்மா ஸ்வராஜ் பிரதமர் மோடியால் தான் உயிரிழந்தார் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதற்கு சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ளது.

இதனையடுத்து, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் கயல்விழியை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ‘சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோர் நரேந்திர மோடியால் தான் உயிரிழந்தனர் எனப் பேசினார். இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

   என் தாயை இழுக்காதீங்க - உதயநிதியின் கருத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் மகள் கண்டனம் | Sushma Swaraj Daughter Condemns Udayanidhi Comment

இதற்கு கண்டனம் தெரிவித்து சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சுரி ஸ்வராஜ் தனது டிவிட்டரில் “என் தயாரின் நினைவுகளை உங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் கூறியது அனைத்தும் பொய்! பிரதமர் நரேந்திர மோடி, என் அம்மா மீது அளவற்ற மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார்.

 

எங்கள் வாழ்வின் மிகவும் கடினமான கால கட்டங்களில் பிரதமரும் கட்சியும்தான் எங்களுக்கு உதவி புரிந்தனர். உங்களின் பேச்சு எங்களை வேதனைப்படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.