சிவசங்கர் பாபா மீது மேலும் இரு மாணவிகள் பாலியல் புகார்! தொடரும் குற்றச்சாட்டுக்களால் வலுக்கும் விசாரணை!

case abuse sivasankar baba 2 students
By Anupriyamkumaresan Jun 25, 2021 04:08 AM GMT
Report

சென்னை சுஷில் ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மேலும் இரண்டு மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சமூக ஊடகங்களில் புகார்கள் வந்ததையடுத்து அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவசங்கர் பாபா மீது மேலும் இரு மாணவிகள் பாலியல் புகார்! தொடரும் குற்றச்சாட்டுக்களால் வலுக்கும் விசாரணை! | Sushilhari School Sivasankar Baba 2 Girls Complain

தொடர்ந்து அவரை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிவசங்கர் பாபா ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சிவசங்கர் பாபாவுக்கு எதிராக ஆதாரங்களை திரட்டும் நோக்கில் சுஷில் ஹரி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய சுஷில் ஹரி பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியைகள் பாரதி, தீபா மற்றும் சிவசங்கரின் சிஷ்யை சுஷ்மிதா ஆகிய 3 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவசங்கர் பாபா மீது மேலும் இரு மாணவிகள் பாலியல் புகார்! தொடரும் குற்றச்சாட்டுக்களால் வலுக்கும் விசாரணை! | Sushilhari School Sivasankar Baba 2 Girls Complain

இந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மேலும் இரண்டு மாணவிகள் புகார் கொடுத்துள்ளனர். இவர்கள் அளித்த புகாரால் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.