இரண்டரை ஆண்டுகள் கழித்து சுஷாந்த் சிங் தங்கிய குடியிருப்புக்கு வாடகைதாரர் கிடைக்க உள்ளார்...!

Sushant Singh Rajput
By Nandhini Jan 04, 2023 10:15 AM GMT
Report

இறந்த நடிகர் சுஷாந்த் சிங் தங்கியிருந்த மும்பை குடியிருப்பில் ரூ.5 லட்சத்திற்கு வாடகைதாரர் கிடைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சுஷாந்த் சிங்

கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், பாந்த்ராவின் புறநகர் பகுதியில் உள்ள தனது வாடகை குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவ ஊழியர் அதிர்ச்சி தகவல்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு, சமீபத்தில் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனையின் ஊழியர் ஒருவர், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார்.

சுஷாந்த் சிங்கின் உடலை பிரேத பரிசோதனையை நடத்திய ருப்குமார் ஷா பேசுகையில், “கொலைக்கும் தற்கொலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. பிணத்தைப் பார்த்தவுடன் அது கொலையா தற்கொலையா என்பது உடனடியாகத் தெரியும். சுஷாந்தின் கழுத்தில் அடையாளங்கள் இருந்தன, அது கொலை போல் இருந்தது. உடலில் குத்தப்பட்டு காயங்கள் இருந்தன. அவர் ‘கொலை செய்யப்பட்டார்’ என்று கூறினார். கூப்பர் மருத்துவமனையின் ஊழியர் வெளியிட்ட தகவலால் பெரும் பரபரப்பும், சலசலப்பும் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது. 

sushant-singh-mumbai-apartment-new-tenant-soon

ரூ.5 லட்சத்திற்கு வாடகை

இந்நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்த மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் மாதம் ரூ 5 லட்சத்திற்கு வாடகைக்கு விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை, பாந்த்ரா வெஸ்ட், கார்ட்டர் சாலையில் உள்ள நடிகர் சுஷாந்த் தங்கியிருந்த குடியிருப்பு 2,500 சதுர அடியில், 4 படுக்கையறைகளுடன் இணைக்கப்பட்ட குளியல் மற்றும் மொட்டை மாடியைக் கொண்டது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்த ஆடம்பர குடியிருப்பிற்கு யாரும் வாடகைக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாந்த்ரா, மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் அவர் இறந்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு விரைவில் புதிய வாடகைதாரர் கிடைக்க உள்ளதாகவும், 30 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகையுடன், மாதம் ரூ.5 லட்சம் வாடகைக்கு விடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், டூப்ளெக்ஸின் என்ஆர்ஐ உரிமையாளர் பாலிவுட் நடிகர், நடிகைகளுக்கு இனி வாடகைக்கு விட விரும்பவில்லை என்றும், ஒரு கார்ப்பரேட் நபரை வாடகைதாரராகத் தேடுவதாகத் தரகர் தகவல் தெரிவித்துள்ளார்.