சினிமாவில் களமிறங்கும் சூர்யா மகன்.? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சூர்யா கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தேவ் என்ற மகனும் தியா என்ற மகளும் உள்ளனர். சூர்யா தற்போது வாடிவாசல், பாலா இயக்கும் படம் என பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது, கோமாளி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் உடன் சூர்யாவின் மகன் தேவ் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது கோமாளி படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தாக அவரே இயக்கி அவரே ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தான் சூர்யாவின் மகன் தேவ் நடித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.