வெளியேறிய 2 இந்திய வீரர்கள்..இங்கிலாந்து உடனான டெஸ்டில் ஏற்பட்ட மாற்றம்..
இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், பிருத்வி ஷா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஆகஸ்ட் 4 ஆம் தேதி தொடங்குகிறது.
இதனிடையே ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்த சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர், அவேஷ் கான் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரர்களை அனுப்பக்கோரி பிசிசிஐயிடம் இந்திய அணி கோரிக்கை விடுத்தது.
இதனால் இலங்கைக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.