தோனிக்கே இடம் இல்லாத ஐபிஎல் அணி - ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் தொடரில் மிக சிறந்த 11 வீரர்களை மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்துள்ளார்.
ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்கள் பலரை உள்ளடக்கிய 2ம் தர இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடருக்காக இலங்கைக்கு சென்றுள்ளது. இந்த இளம் வீரர்களில் ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் ஆடும் சூர்யகுமார் யாதவ்வும் ஒருவர்.

அவர் ஐபிஎல் தொடருக்கான தனது சிறந்த 11 வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார். அதில் தன் பெயருடன், ஜோஸ் பட்லர், ரோகித் சர்மா, விராட் கோலி, டிவில்லியர்ஸ்,ஹர்திக் பாண்டியா, ஆண்ட்ரூ ரசல், ரவீந்திர ஜடேஜா, ரஷீத் கான், ஜஸ்ப்ரிட் பும்ரா, முகமது ஷமி ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
அவரின் இந்த கனவு அணியில் தோனி இடம்பெறாதது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.