என்ன ஒரு வீரர்... அவர் அனைத்து ஷாட்டுகளையும் ஆடுகிறார்... சூர்யகுமாரை புகழ்ந்து தள்ளிய பட்லர்

T20 World Cup 2022 Jos Buttler Suryakumar Yadav
By Nandhini Nov 10, 2022 10:25 AM GMT
Report

அவர் அனைத்து ஷாட்டுகளையும் ஆடுகிறார் என்று சூர்யகுமாரை இங்கிலாந்து கேப்டன் பட்லர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதல்

டி20 உலகக்கோப்பையில் இன்று அரையிறுதி போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிக் கொண்டு வருகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைய உள்ளது.

suryakumar-yadav-jos-buttler-cricket

ஜோஸ் பட்லர் பேட்டி

இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேசுகையில், எனக்கு சூர்யகுமாரின் ஆட்டத்தை பார்ப்பது பிடிக்கும். அவர் சிறப்பாக விளையாடுகிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் தற்போதைய சூழ்நிலையில் சிறந்த பேட்ஸ்மேன்னாக அவர் வலம் வருகிறார். ஆனால், உலகின் எந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஒரு விக்கெட்டை உருவாக்க ஒரு வாய்ப்பு போதும். அவர் அனைத்து ஷாட்டுகளையும் ஆடுகிறார். அனைத்து ஷாட்டுகளையும் ஆட அவர் அவரை அனுமதிக்கிறார். இந்தியா பல சிறப்பான வீரர்களை கொண்டிருக்கிறது என்றார்.