ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியீடு - தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் முதலிடம்...! குவியும் வாழ்த்து

Suryakumar Yadav International Cricket Council
By Nandhini Nov 23, 2022 11:55 AM GMT
Report

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் முதலிடத்தில் நீடித்து வருவதால் அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

டி20 உலக கிரிக்கெட் தொடர் -

ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை டி20 தொடருக்குப் பின்னர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நேப்பியரில் நேற்று நடந்தது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

இதனையடுத்து, களமிறங்கிய இந்திய அணி 9 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்தது. அப்போது, தொடர் மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனால், டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணியின் வெற்றிக்கு 76 ரன்கள் வெற்றி இலக்காக இருந்தது. இதன் பின், 3வது டி20 போட்டி சமனில் முடிந்தது. இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும் ஏற்கனவே 2வது போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.

suryakumar-yadav-international-cricket-council

தரவரிசை பட்டியல் 

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டிருக்கிறது.

கடந்த 2ம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்து அசத்தினார்.

இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசிய சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் தொடர்ந்து 2-வது இடத்தை நீடித்து வருகிறார்.

ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை -

சூர்யகுமார் யாதவ் - 890 புள்ளிகள்

முகமது ரிஸ்வான் - 836 புள்ளிகள்

டெவோன் கான்வே - 788 புள்ளிகள்

பாபர் ஆசம் - 778 புள்ளிகள்

ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள்

டேவிட் மாலன் - 719 புள்ளிகள்

கிளென் பிலிப்ஸ் - 699 புள்ளிகள்

ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள்

ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள்

பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்