எந்த மருந்தாவது கொடுத்து என்னை போட்டிக்கு தயார்படுத்திவிடுங்கள்; டாக்டரிடம் கெஞ்சிய சூர்யகுமார் யாதவ்

Viral Video Indian Cricket Team Suryakumar Yadav
By Nandhini Sep 28, 2022 10:52 AM GMT
Report

எந்த மருந்தாவது கொடுத்து என்னை போட்டிக்கு தயார்படுத்திவிடுங்கள் என்று டாக்டரிடம் கெஞ்சிய சூர்யகுமார் யாதவ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது.

இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது. டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த இரு அணிகளுக்கிடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 25ம் தேதி நடைபெற்றது.

இப்போட்டியில் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகளின் புதிய தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இந்திய அணி நீடித்து வருகிறது.

suryakumar-yadav-indian-cricket-team-viral-video

சூர்யகுமார் யாதவ் பேட்டி

இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்கள் விளாசி 36 பந்துகளில் 69 ரன்கள் அடித்து சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இப்போட்டிற்கு பிறகு சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகிய இருவரும் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். இது குறித்த வீடியோவை பிசிசிஐ தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

அந்த வீடியோவில், சூர்யகுமாரிடம் பிசியோ அறையில் உங்களைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்றும், அதிகாலை 3 மணிக்கு ஏன் எழுந்தீர்களாக அக்சர் படேல் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த சூர்யகுமார் யாதவ் பேசுகையில் 

இந்த போட்டிக்கு முன்தினம் இரவு எனக்கு தீவிரமான வயிற்று வலி இருந்தது. வயிற்றுவலியோடு காய்ச்சலும் அதிகமாக இருந்தது. இதனால், போட்டிக்கு முன்பு நான் டாக்டரிடம் சென்று நீங்கள் எனக்கு என்ன செய்வீர்களோ என்று எனக்கு தெரியாது.

போட்டிக்கு என்னை தயார்படுத்துங்கள். ஏதாவது ஊசி மருத்து மாத்திரை வேண்டுமானாலும் கொடுங்கள் என்று கேட்டேன். மருத்துவர் உடனே எனக்கு மருந்தை கொடுத்தார். நானும் மருந்து போட்டுக்கொண்டேன். களத்தில் இறங்கியபோது, இந்திய அணியின் ஜெர்ஸியை அணிந்தவுடன் ஒரு உத்வேக உணர்வு கிடைத்தது என்றார்.