ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை பட்டியல் - முதலிடத்தை நூலிழையில் தவறவிட்ட சூர்யகுமார் யாதவ்..!

Indian Cricket Team Suryakumar Yadav
By Nandhini 1 மாதம் முன்

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தை நூலிழையில் சூர்யகுமார் யாதவ் தவறவிட்டுள்ளார்.

டி20 கிரிக்கெட் போட்டி -

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

தவறவிட்ட சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில், ஆண்களுக்கான டி20 பேட்டிங் தரவரிசையை ஐசிசி நேற்று வெளியிட்டது.

இந்த பட்டியலில், இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 838 ரேட்டிங் புள்ளிகளுடன் 2-வது இடத்தில் நீடித்து வருகிறார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த 2-வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 3-வது டி20 போட்டியில் சொதப்பியதால் முதல் இடத்தை சூர்யகுமார் நூலிழையில் தவறவிட்டார். இந்த தரவரிசையில் முகமது ரிஸ்வான் 854 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளார். ரிஸ்வான்- சூர்யகுமார் ஆகியோருக்கு இடையே 16 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருக்கிறது.  

suryakumar-yadav-indian-cricket-team