என் இடத்திற்கு ஆபத்து வந்துவிடும் போல் இருக்கிறது... - சூர்யகுமார் பேட்டி...!
என் இடத்திற்கு ஆபத்து வந்துவிடும் போல் இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் தெரிவித்துள்ளார்.
கடைசி டி20 போட்டி -
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு வருகை தந்துள்ளது. இந்தியா அணியும், தென்னாப்பிரிக்கா அணியும் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வெற்றி
இப்போட்டியில், 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இத்தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றியது. இதனையடுத்து, இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை லக்னோவில் நடைபெற இருக்கிறது.
சூர்யகுமார் பேட்டி
இந்நிலையில், போட்டிக்கு பிறகு நடந்த கோப்பை வழங்கும் நிகழ்ச்சியில், டி20 தொடருக்கான தொடர் நாயகன் விருது இந்திய வீரர் சூர்யகுமாருக்கு வழங்கப்பட்டது.
விருது பெற்ற சூர்யகுமார் பேட்டியில், தினேஷ் கார்த்திக் முன் வரிசையில் 4-வது விக்கெட்டில் களமிறக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய சூர்யகுமார், தினேஷ் கார்த்திக்கிற்கு போட்டியின் போது சிறிது நேரம் தேவைப்படுகிறது. அவர் ஆடிய விதத்தை பார்த்தால் எனது 4-ம் விக்கெட் இடத்திற்கு ஆபத்து வந்துவிடும்போல் உள்ளது என்று புகழ்ந்து தள்ளினார்.