இந்த ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்து நொறுக்கி சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை - மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Indian Cricket Team Suryakumar Yadav
By Nandhini Sep 30, 2022 01:06 PM GMT
Report

இந்த ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்து நொறுக்கி சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை படைத்துள்ளார்.

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது.

இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது. 20 ஓவர் கடைசி கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

2-வது இடத்துக்கு முன்னேறி சூர்யகுமார் யாதவ்

சமீபத்தில் ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் (801 ரேட்டிங் புள்ளி) 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த வாரம் வெளியான டி20 பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ், தற்போது பாபருடன் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்ரமையும் பின்னுக்கு தள்ளி இருக்கிறார். இப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கும் ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார்.

மகத்தான சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்

திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் 4-வது வரிசையில் களம் கண்ட இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த 32 வயதான சூர்யகுமார் யாதவ், சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக ரன் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 732 ரன்கள் குவித்திருக்கிறார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் நொறுக்கிய வீரர் என்ற மகத்தான சாதனையையும் சூர்யகுமார் யாதவ் சொந்தமாக்கினார்.

அவர் இந்த ஆண்டில் இதுவரை 45 சிக்சர்கள் விளாசியிருக்கிறார். அந்த சாதனையை சூர்யகுமார் தனது 21-வது இன்னிங்சிலேயே முறியடித்திருக்கிறார்.