ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு - 2-ம் இடத்தை கைப்பற்றிய சூர்யகுமார் யாதவ்..!

Indian Cricket Team Suryakumar Yadav
By Nandhini Sep 29, 2022 08:48 AM GMT
Report

20 ஓவர் போட்டி

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி விளையாடியது. இத்தொடர் செப்டம்பர் 20, 23, 25ம் தேதியோடு நிறைவடைந்தது.

20 ஓவர் கடைசி கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய இந்திய அணி விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

suryakumar-yadav-indian-cricket-team

2-வது இடத்துக்கு முன்னேறி சூர்யகுமார் யாதவ்

இப்போட்டியின் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்து அசத்தினார். இதனையடுத்து, ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் (801 ரேட்டிங் புள்ளி) 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த வாரம் வெளியான டி20 பேட்டிங் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ், தற்போது பாபருடன் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஐடன் மார்க்ரமையும் பின்னுக்கு தள்ளி இருக்கிறார்.

இப்பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் நீடிக்கும் ஒரே இந்திய வீரர் என்ற பெருமையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (861 ரேட்டிங் புள்ளி) இருக்கிறார்.