360 டிகிரியை தாண்டி விளையாடக்கூடிய ஒரே வீரர் நீங்கள்தான்... - சூர்யகுமார் யாதவை புகழ்ந்த டி.வில்லியர்ஸ்..!
360 டிகிரியை தாண்டி விளையாடக்கூடிய ஒரே ஒரு வீரர் நீங்கள்தான் என்று சூர்யகுமார் யாதவிற்கு டி.வில்லியர்ஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.
ஜிம்பாப்வே வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
நேற்று நடைபெற்ற T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், குரூப்-2 கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜிம்பாப்வே அணி நேருக்கு நேர் மோதிக் கொண்டன. 'டாஸ்' வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியில், உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் களம் புகுந்த பிறகு தான் ஆட்டம் உண்மையிலேயே சூடுபிடித்தது.
சரவெடியான பேட்டிங்கால் குழுமியிருந்த 82 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்திய அவர் கராவா, சதரா ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டு பிரமிக்க வைத்தார்.
இந்தப் போட்டியில், இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது. நேற்றைய ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை பெற்று ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
சூர்யகுமார் யாதவை புகழ்ந்த டி.வில்லியர்ஸ்
நேற்றைய ஆட்டத்தில் பட்டையை கிளப்பிய சூர்யகுமார் யாதவ் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த ஏபி டீ வில்லியர்ஸ் டுவிட்டர் பக்கத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்த அந்த பதிவில், "நீங்கள் அங்கே மிகவும் விரைவாக வருகிறீர்கள் நண்பரே. (சொல்லப்போனால்) இன்னும் அதிகமாக. இன்று மிகச் சிறப்பாக விளையாடினீர்கள். சொல்லப்போனால் 360 டிகிரி என்பதையும் தாண்டிய உச்சத்தை நீங்கள் அடையப் போகிறீர்கள் என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார்.
Suryakumar Yadav reacts to comparisons with AB de Villiers.@surya_14kumar | @ABdeVilliers17 | #INDvZIM | #T20WorldCup pic.twitter.com/an9464SpaD
— CricTracker (@Cricketracker) November 6, 2022