உலகக்கோப்பையை வென்ற கையோடு கேப்டன் சூர்யகுமார் எங்கு சென்றார் தெரியுமா? வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அனுமன் கோவிலில் வழிபட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா, மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது.
What a Movement 🏆🇮🇳...#T20WorldCup2026final #IndianCricketTeam
— 𝐀𝐧𝐝𝐫𝐮 (@AndruDarlz) March 8, 2026
pic.twitter.com/r9dwr8ti1E
டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஒரே அணி இந்தியாதான்.
அதேபோல் சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைத்தது.

கௌதம் கம்பீரின் பயிற்சியின் கீழ் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2026 டி20 உலகக்கோப்பை என இரு ஐசிசி கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது.
கோவிலில் தரிசனம்
இதனைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் (Rahul Dravid) மற்றும் பிசிசிஐ பிரிவின் தலைவர் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோருக்கு இந்த டி20 உலகக்கோப்பையை சமர்ப்பிப்பதாக கௌதம் கம்பீர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav), தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோ,ர் இன்று அதிகாலையில் நரேந்திர மோடி மைதானத்திற்கு அருகிலேயே பிரசித்தி பெற்ற அனுமன் தெக்ரி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
SURYA, GAMBHIR, JAY SHAH AT HANUMAN TEAMPLE WITH T20 WC TROPHY ❤️ 🙏 pic.twitter.com/jKPH5m3o8p
— Johns. (@CricCrazyJohns) March 8, 2026
அங்கு கழுத்தில் மாலையுடனும், கையில் உலகக்கோப்பையை ஏந்தியபடியும் சூர்யகுமார் யாதவ் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
facebook
