வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை கிடையாது!..விஜய்யை தாக்கி பேசினாரா சூர்யா?

Suriya Vijay Tamil Cinema Tamil nadu
By Jiyath Jul 16, 2023 09:03 AM GMT
Report

அகரம் அறக்கட்டளை சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு நடிகர் சூர்யா சிறப்புரையாற்றினார்.

அகரம் அறக்கட்டளை

நடிகர் சூர்யா, கார்த்தி மற்றும் இவர்களின் அப்பா சிவக்குமார் ஆகியோர் நடத்தி வரும் ஒரு மிகப்பெரிய கல்வி அறக்கட்டளை தான் "அகரம்". இதன் மூலம் ஆண்டு தோறும் பல ஏழை எளிய மாணவர்களுக்கு ஏராளமான உதவிகளை செய்து வருகின்றனர்.

வெறும் மார்க் மட்டுமே வாழ்க்கை கிடையாது!..விஜய்யை தாக்கி பேசினாரா சூர்யா? | Surya Speech Agaram Foundation Ibc 90

இந்த அறக்கட்டளையில் படித்தவர்கள் இப்போது பல உயரங்களை அடைந்து அகரம் அறக்கட்டளைக்கும் அவர்களின் வாழ்க்கைக்கும் பெருமை சேர்த்து வருகின்றனர். ஆண்டுதோறும் லட்சியத்தில் சாதித்த மாணவர்களுக்கு அகரம் சார்பாக பாராட்டு விழா நடத்துவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பாராட்டு விழா இன்று சாலிகிராமத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கிய சூர்யா பின்னர் மேடையில் சிறப்புரையாற்றினார். 

சூர்யா பேச்சு 

சமூகத்தில் ஏகப்பட்ட ஏற்றது தாழ்வுகள் இருக்கிறது . சாதி,மதம் எல்லாவற்றையும் கடந்து எப்படி வாழ்க்கையைப் பார்க்கப் போகிறோம் என்பது தான் முக்கியம். வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை கிடையாது.

அதைத்தாண்டி வாழ்க்கையை எப்படி புரிந்து கொள்வது என்பதையும், தொழிலுக்கும் சுற்றியிருக்கும் அறிவியலுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்மந்தம் என்பதை சொல்லிக் கொடுப்பது கல்விதான். அரசப் பள்ளி ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் தலை வணங்குகிறேன். ஏனெனில் எல்லா குடும்ப சூழ்நிலைகளும் தாண்டி நமது வீட்டில் இருக்கும் 2 குழந்தைகளை பார்ப்பதே கடினமான வேலை.

ஆனால் 40 மாணவர்களையும் ஒரே நேரத்தில் சந்தோஷமான சூழ்நிலையில் வைத்திருப்பதற்கு தலை வணங்குகிறேன். இதுவரை 5200 மாணவர்களின் வாழ்க்கையை மாற்ற 14 வருடங்கள் எடுத்துக்கொண்டது. ஆனால் இப்போது அரசுடன் சேர்ந்து இயங்குவதில் மூன்று வருடத்தில் 1 லட்சத்துக்கும் மேல் மாணவர்களின் கல்விக்கு உதவி செய்ய முடிகிறது. அரசுடன் சேர்ந்து இயங்குவதில் பெருமையாக இருக்கிறது என்று அவர் பேசினார். 

ஆனால் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கை இல்லை என்ற சூர்யாவின் பேச்சு விஜய்யின் முதல் மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியதை தாக்கி பேசியது போல் இருந்தது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்