சூர்யா சிவா பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை - அண்ணாமலை
கட்சி நிகழ்ச்சிகளில் பாஜக ஓபிசி அணியின் மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா தற்காலிகமாக பங்கேற்க வேண்டாம் என அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.
சூர்யா சிவாவுக்கு நிபந்தனை
சூர்யா சிவா தனது பாஜக கட்சியில் உள்ள பிற்படுதப்பட்டோர் அணி பெண் நிர்வாகி ஒருவரிடம் கடும் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியானது.
இந்த நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் அவர்களுக்கும், ஓபிசி அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா அவர்களுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று இன்று காலை என் கவனத்திற்கு வந்தது.
இந்த சம்பவத்தை விசாரித்து கட்சி தலைமைக்கு அடுத்து 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான கனக சபாபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணியின் மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க வேண்டாம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.