சூர்யாவின் மும்பை வீட்டில் ஹிந்தி மொழியில் பெயர் பலகை? கிளம்பிய புது சர்ச்சை!
சூர்யாவின் மும்பை வீட்டில் ஹிந்தி மொழியில் பெயர் பலகை இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது.
மும்பையில் வீடு
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் அவரது 42வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகா, மகள் தியா, மகன் தேவ் ஆகியோருடன் மும்பையில் வீடு வாங்கி செட்டிலாகி இருப்பதாக கூறப்படுகிறது.
ஹிந்தி பலகை
மேலும், ஜோதிகா நடிப்பதற்காகத்தான் அங்கு வசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய புதிய வீட்டிற்கு சூர்யா இந்தியில் பெயர் வைத்திருக்கும் பலகை புகைப்படம் சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை ஆய்வு செய்ததில், பாந்திரா நகரில் உள்ள பிரபலமான மிஜு என்ற ஜப்பானிய உணவகம் என்று தெரியவந்துள்ளது. சூர்யா தன்னுடைய குடும்பத்தினருடன் உணவகத்தில் இருந்து வெளியே வரும்போதுதான் அவரை மீடியாக்கள் ஃபோட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.