மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யகுமார் யாதவ்... - வைரலாகும் வீடியோ...!

Viral Video Suryakumar Yadav Tirumala
By Nandhini Feb 21, 2023 01:46 PM GMT
Report

மனைவியுடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யகுமார் யாதவின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது. 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

விசித்திர சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்

சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்தது.

இப்போட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும், 30 வயதை கடந்த பின் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று சாதனைப் படைத்தார்.

நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது 32 வயதில் அறிமுகமாகியுள்ளார். 2021ம் ஆண்டு டி20, ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானபோது அவருக்கு வயது 30 என்பது குறிப்பிடத்தக்கது.

surya-kumar-yadav-tirupati-viral-video

திருப்பதியில் சாமி தரிசனம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், தன் மனைவி தேவிஷாவுடன் திருப்பதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோவிலில் அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அவரிடம் சென்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.