தெருவில் இறங்கி ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடி சூர்யகுமார் யாதவ்... - வைரலாகும் வீடியோ..!

Cricket Viral Video Indian Cricket Team Suryakumar Yadav
By Nandhini Mar 07, 2023 02:07 PM GMT
Report

தெருவில் இறங்கி ரசிகர்களுடன் கிரிக்கெட் விளையாடி சூர்யகுமார் யாதவ்வின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விசித்திர சாதனை படைத்த சூர்யகுமார் யாதவ்

சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்தது.

இப்போட்டியில், இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ், 3 வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும், 30 வயதை கடந்த பின் அறிமுகம் ஆன முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்று சாதனைப் படைத்தார். நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், தனது 32 வயதில் அறிமுகமாகியுள்ளார்.

2021ம் ஆண்டு டி20, ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானபோது அவருக்கு வயது 30 என்பது குறிப்பிடத்தக்கது.

surya-kumar-yadav-cricket-viral-video

தெருவில் கிரிக்கெட் விளையாடிய சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இந்திய கிரிக்கெட் வீரர் சூர்யகுமார் யாதவ் தங்கள் ரசிகர்களுடன் சேர்ந்து தெருவில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.