சூர்யாவிற்கு மிக விலையுயர்ந்த வாட்ச்சை பரிசாக கொடுத்தார் கமல் - வைரலாகும் புகைப்படம்

Kamal Haasan Suriya New Tamil Cinema
By Nandhini Jun 08, 2022 12:28 PM GMT
Report

‘விக்ரம்’ படம் வெற்றி பெற்றதை அடுத்து இயக்குநர் லோகேஷூக்கு விலையுயர்ந்த காரை பரிசாக கொடுத்ததையடுத்து, நடிகர் சூர்யாவிற்கு நடிகர் கமல்ஹாசன் விலையுயர்ந்த வாட்ச்சை பரிசாக அளித்துள்ளார்.

‘விக்ரம்’ திரைப்படம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள படம் தான் ‘விக்ரம்’. இப்படத்தில் நடிகர் சூர்யா, விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘விக்ரம்’ படம் கடந்த ஜுன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான முதல் நாளிலேயே இப்படம் குறித்த விமர்சனம் தொடர்ந்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

வசூல் சாதனை

‘விக்ரம்’ திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குளில் கூட்டம் அலை மோதுகிறது. தற்போது, விக்ரம் படம் வெளியான மூன்றே நாளில் உலகம் முழுவதும் 150 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடித்த பீஸ்ட், அஜீத் நடித்த வலிமை ஆகியவை படங்களின் வசூல் செய்த சாதனையை ஆண்டவரின் ‘விக்ரம்’ படம் முறியடித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

நன்றி தெரிவித்த சூர்யா

சமீபத்தில், இப்படி ஒரு கதாபாத்திரத்தில் உலகநாயகனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நடிகர் சூர்யா சமூகவலைத்தளத்தில் நன்றி கூறி பதிவிட்டிருந்தார். கோடிக்கணக்கில் வசூலை வாரி அள்ளும் விக்ரம் படத்தில் சம்பளமே வாங்காமல் சூர்யா நடித்திருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சூர்யாவின் செயலை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

கமல்ஹாசன் வீடியோ

தரமான திரைப்படங்களை தாங்கிப் பிடிக்க தமிழ் ரசிகர்கள் தவறியதே இல்லை என்றும், ‘விக்ரம்’ படத்தில் பின்னணியில் கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார் பரிசளித்த கமல்

நேற்று நடிகர் கமல்ஹாசன், ‘விக்ரம்’ திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு விலையுயர்ந்த Lexus Carயை பரிசாக வழங்கினார்.

சூர்யாவிற்கு வாட்ச் பரிசளித்த கமல்  

நடிகர் சூர்யாவிற்கு நடிகர் கமல்ஹாசன் விலை உயர்ந்த ரோலெக்ஸ் வாட்ச்சை பரிசாக கொடுத்துள்ளார்.