கொதித்த சிவக்குமார்; விடாப்பிடியாக நின்று ஜோதிகாவை கரம்பிடித்த சூர்யா - இதுதான் காரணமா?
சூர்யா ஜோதிகா காதல், திருமணம் குறித்த தகவல்கள் சில வெளியாகியுள்ளது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா. சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில், நந்தா படத்திற்கு பிறகு தான் சூர்யாவிற்கு காக்க காக்க பட வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் ஜோதிகாவையே சூர்யா பரிந்துரை செய்ய, இவர்கள் இருவருக்கும் இடையேயான காதல் வெளியே தெரிய வருகிறது.
எதிர்ப்பு?
இந்த நிலையில் முன்னணி பத்திரிக்கை நிருபர் ஒருவர் இவர்களது காதல் குறித்தும், அதில் சில கேள்விகளை முன்வைத்தும் கட்டுரை ஒன்றை எழுதி விடுகிறார். இதை பார்த்து கொந்தளித்து போன சிவக்குமார் அந்த நிருபரை தன் வீட்டிற்கே அழைத்து கன்னா பின்னாவென்று திட்டி அனுப்பினார்.
அதன் பின்னர் விஷயம் எல்லாருக்கும் தெரிந்துவிட சூர்யா நான் ஜோதிகாவை தான் கல்யாணம் செய்வேன் என்று விடாப்பிடியாக நின்றார். பின்னர் எல்லோரும் அரை மனதாக தான் ஜோதிகாவை ஏற்றுக் கொண்டார்கள்.
அதன் பின்னர் ஒரு மேடையில் கூட சிவக்குமார் பெரியவர்தான் அவர் இஷ்டத்திற்கு திருமணம் செய்து கொண்டார் சிறியவனுக்காவது நம்ம ஜாதியில் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று வார்த்தையை விட்டதாக பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.