நடிகர் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன ?மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Suriya Actors Star Movie
By Vidhya Senthil Aug 10, 2024 01:00 PM GMT
Report

 கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுத்தை சிவா 

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் தற்பொழுது நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் , இப்படத்தில் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன ?மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்! | Surya Got A Injury At Shooting Spot

இதனையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44 படத்தில் தற்போது நடித்து கொண்டிருக்கிறார் சூர்யா. இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூலை 26 ஆம் தேதி ஊட்டியில் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் , இன்று சண்டை காட்சியின் போது எதிர்பாராத விதமாக நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவை விவகாரத்து செய்கிறாரா? பதிலடி கொடுத்த ஜோதிகா!

நடிகர் சூர்யாவை விவகாரத்து செய்கிறாரா? பதிலடி கொடுத்த ஜோதிகா!

 தலையில் காயம்

இதனால் உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர்  பின்னர் நடிகர் சூர்யா சென்னை திரும்பியுள்ளார்

நடிகர் சூர்யாவின் தற்போதைய நிலை என்ன ?மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்! | Surya Got A Injury At Shooting Spot

   மேலும் சில நாட்களுக்கு ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் சூர்யா தற்போது ஓய்வில் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. .படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.