’அடடா..என்னதான் நீ நான்’ன்னு அடிச்சிக்கிட்டாலும், இந்த விஷயத்துல மூணு பேரோட ரசிகர்களும் ஒன்னு கூடிட்டாங்க’ - பாராட்டி தள்ளும் பொதுமக்கள்
கோவை காந்திபுரம் அருகே நடிகர் விஜய்யின் ரசிகர்கள் விலையில்லா விருந்தகம் என்ற பெயரில் ஆதரவற்றவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் ரசிகர்கள் இந்த நலப்பணியை செய்து வருகின்றனர்.


அண்மையில் நடிகர் அஜித் குமாரின் மகன் பிறந்த நாளை முன்னிட்டு விலையில்லா விருந்தகத்தின் மூலமாக உணவுகளை அஜித் ரசிகர்கள் வழங்கினர்.
இப்பொழுது நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வெற்றியடைந்ததை கொண்டாடும் வகையில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு வழங்கி உள்ளனர் சூர்யாவின் ரசிகர்கள்.

நடிகர் விஜய் ரசிகர்கள் தொடங்கிய நலப்பணியில் சக நடிகர்களின் ரசிகர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஏழை எளிய மக்களுக்கு உதவுவது பாராட்டுதலுக்குரியது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
‘சமூக வலைதளங்களில் நாங்க , நீங்கன்னு சண்டை போடும் ரசிகர்கள் மத்தியில் ஒன்றினைந்து மக்களுக்கு உதவும் கோவை மாவட்ட ரசிகர்கள் எங்க’ன்னு கேட்கனும் போல இருக்கு.
எப்படியோ நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ என்கிறார்கள் மக்கள்.
அர்ச்சுனாவுக்கு தெரியும்! விடுதலைப் புலிகள் அமைப்பால் ஆட்சியை கைப்பற்றிய அநுர என்கிறது மகிந்த தரப்பு IBC Tamil
வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மற்றும் மனைவி மீது புதிய குற்றச்சாட்டை முன்வைத்த அமெரிக்க அரசு IBC Tamil
பிச்சை எடு.. உன் கணவன் ஒரு புலி.... : நீதிமன்றத்தில் சந்தியா எக்னலிகொடவை மிரட்டிய ஞானசாரதேரர் IBC Tamil