68 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய சூர்யா : மும்பையில் செட்டில் ஆகப்போகின்றாரா ?

Suriya
By Irumporai 2 வாரங்கள் முன்
Report

நடிகர் சூர்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பே மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சூர்யா ஆடம்பரமான டுப்லெஸ் ப்ளாட் ஒன்றை மும்பையில் வாங்கியுள்ளாராம்.

மும்பையில் ஆடம்பர வீடு

ஏற்கனவே அவருக்கு சென்னையில் இருக்கும் வீடு அரண்மனை போல பிரமாண்டமாக தான் இருக்கும். ஆனாலும் சில காரணங்களால் சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் மும்பைக்கு சென்றுவிட்டார்.

68 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய சூர்யா : மும்பையில் செட்டில் ஆகப்போகின்றாரா ? | Surya Bought A Luxury Plot For 68 Crore

  68 கோடி

இதனையடுத்து, சூர்யா தற்போது மும்பையில் வாங்கியுள்ள அந்த ஆடம்பரமான ப்ளாட் கிட்டத்தட்ட 68 கோடி எனவும் கூறப்படுகிறது. எனவே, 68 கோடியில் சூர்யா டுப்லெஸ் ப்ளாட் ஒன்றை வாங்கிய செய்திதான் தற்போது பெரிதளவில் தலைப்பு செய்தியாக இருக்கிறது.

மேலும், நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.