நிழலிலும் நிஜத்திலும் ஹீரோவாக திகழும் நெடுமாறன் ராஜாங்கம்! அண்ணன் சூர்யா பிறந்த தினம் இன்று!!

today birthday actor surya
9 மாதங்கள் முன்
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கட்டுரை

விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் என இந்த நால்வரையும் கிரிக்கெட்டில் ‘ஃபேன்டாஸ்டிக் ஃபோர்’ என்கிற அடைமொழியுடன் அழைப்பது வழக்கம்.

நிழலிலும் நிஜத்திலும் ஹீரோவாக திகழும் நெடுமாறன் ராஜாங்கம்! அண்ணன் சூர்யா பிறந்த தினம் இன்று!!

இதேப்போல் தமிழ் சினிமாவிலும் ஒரு ‘ஃபேப் ஃபோர்' பட்டியல் இருக்கிறது. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரமோடு போட்டிபோட்டு உள்ளே நுழைந்து தன் திறமையான நடிப்பால் உச்சத்துக்கு உயர்ந்திருக்கும் இளவரசன் சூர்யாவின் 46-வது பிறந்த தினம் இன்று.

நடிப்பில் சிகரம் சிவக்குமார் வழி வந்த நடிகர் சூர்யா அவர் பெயருக்கு பெருமை சேர்த்து உச்ச நட்சத்திர கலைஞராக உருவெடுத்துள்ளார். சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, கார்த்திக் என வீட்டில் அனைவருமே நடிப்பில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர்.

நிழலிலும் நிஜத்திலும் ஹீரோவாக திகழும் நெடுமாறன் ராஜாங்கம்! அண்ணன் சூர்யா பிறந்த தினம் இன்று!!

ஒரு படத்தில் சூர்யா நடிக்க தன்னை அந்த கதாபாத்திரமாக மாற்றிக்கொள்ள பல நாட்கள் முயற்சி செய்து வருவாராம். அந்த வகையில் அடுத்து, நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்துக்காக ஜல்லிக்கட்டு காளைகள் பற்றி தெரிந்துகொள்ள அதுதொடர்பான புத்தகங்களை தொடர்ந்து படித்துவருகிறார்.

அனைவரும் பார்த்து நாமும் இது போல் வாழ வேண்டும் என்று சூர்யா குடும்பத்தையே பலரும் உதாரணம் காட்டுவர். அந்த வகையில் நடிகர் சூர்யா அவரது குடும்பத்தினர் மீது அவ்வளவு பாசம் வைத்துள்ளார். மனைவி, குழந்தைகளை விட்டுப்பிரிந்திருப்பதை எப்போதும் வெறுப்பவர்.

நிழலிலும் நிஜத்திலும் ஹீரோவாக திகழும் நெடுமாறன் ராஜாங்கம்! அண்ணன் சூர்யா பிறந்த தினம் இன்று!!

வீட்டிலிருந்தால் குழந்தைகள் தியா, தேவ், தம்பி கார்த்தியின் குழந்தைகள் உமையாள், கந்தனுக்கு புதுப்புது விளையாட்டுகள் சொல்லித்தருவது ஹாபியாக வைத்திருக்கிறார். குழந்தைகளோடு உட்கார்ந்து சினிமா பார்க்கும் பழக்கம் இல்லை. எங்கே போனாலும் தம்பி, தங்கை குழந்தைகள் என அனைவருக்கும் சேர்த்து ஏராளமான பரிசுப்பொருட்களை வாங்கிக்கொண்டுவந்து குவிப்பது சூர்யாவின் வழக்கம்.

கூட்டுக்குடும்பமாக வாழ்வதால் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஹாலில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து அந்த வாரத்தில் நடந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பது வழக்கம். ஷூட்டிங்காக வெளியூர் போனாலும் இந்த மீட்டிங் மிஸ் ஆவதில்லை. வீடியோ கான்ஃபிரன்ஸில் ஃபேமிலி மீட்டிங்கை நடத்திவிடுகிறார் அண்ணன் சூர்யா.

நிழலிலும் நிஜத்திலும் ஹீரோவாக திகழும் நெடுமாறன் ராஜாங்கம்! அண்ணன் சூர்யா பிறந்த தினம் இன்று!!

சூர்யாவின் மகன் தேவ் இப்போது டைரக்‌ஷனில் அதிக ஆர்வத்தோடு இருக்கிறானாம். அப்பாவை நடிக்க வைத்து குட்டி குட்டி வீடியோக்கள் எடுக்கிறாராம் குட்டி டைரக்டர் தேவ்.

மனைவி ஜோதிகா, தம்பி கார்த்தி, நண்பன் ராஜசேகர் என இந்த மூவரும் இல்லாமல் புது படத்துக்கான கதை கேட்பதில்லை. மூவரின் ஆலோசனைகளையும் உள்வாங்கி, விவாதித்து இறுதிசெய்தபிறகுதான் இயக்குநருக்கு ஓகே சொல்வார்.

நிழலிலும் நிஜத்திலும் ஹீரோவாக திகழும் நெடுமாறன் ராஜாங்கம்! அண்ணன் சூர்யா பிறந்த தினம் இன்று!!

அப்பா சிவக்குமாரின் கருத்துக்கு நேரடியாக எதிர்கருத்து சொல்லும் பழக்கம் சூர்யாவிடம் இப்போதும் இல்லை. மாற்றுக் கருத்து இருந்தால் அதை அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் சொல்லச்சொல்வார்.

சூரரைப் போற்று' பட ரிலீஸுக்கு முன்புவரை கொஞ்சம் மன அழுத்தத்தில் இருந்தவர் இப்போது மனமகிழ்ச்சியோடு இருக்கிறார். படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் நிஜத்திலும் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏராளமான குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார் என்பது பெருமையே.

நிழலிலும் நிஜத்திலும் ஹீரோவாக திகழும் நெடுமாறன் ராஜாங்கம்! அண்ணன் சூர்யா பிறந்த தினம் இன்று!!

சிறந்த நடிகனாய் மக்கள் விரும்பும் கலைஞனாக மாற தன்னையே வருத்திகொண்டு பல கோடி ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்த ரசிகர்களின் வசிய கலைஞன் சூர்யா நடிப்பில் சிங்கமாய் குணத்தில் தங்கமாய் ஜொலிக்கும் சூர்ய்விற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.