"எதற்கும் துணிந்தவன்" - மாஸ்ஸாக வெளியானது "சூர்யா 40" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...!

Sun pictures Actor suriya எதற்கும்துணிந்தவன் ET
By Petchi Avudaiappan Jul 22, 2021 12:39 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நடிகர் சூர்யா நடிக்கும் 40 வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்  வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சூர்யா நாளை தனது 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் 40வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்திற்கான சூர்யாவின் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது.

"எதற்கும் துணிந்தவன்" - மாஸ்ஸாக வெளியானது "சூர்யா 40" படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...! | Surya 40Th Film 1St Look Released

மேலும் இந்த படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என பெயரிடப்பட்டுள்ளது. இதன் ப்ரோமோ வீடியோவில் நடிகர் சூர்யா கையில் பெரிய கத்தியுடன் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது.


அதன் வீடியோ காண: