விஜே பார்வதியா இது? - அதிர்ச்சியில் ரசிகர்கள்
சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின்னர் விஜே பார்வதியின் நிலையை கண்டு ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
பிரபல ஜீ தமிழ் சேனலில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் வித்தியாசமான ரியாலிட்டி ஷோவான சர்வைவரில் சமீபத்தில் பல ட்விஸ்ட்கள் அரங்கேறின. இது போட்டியாளருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏனென்றால் வேடர்கள் டீமிற்கு புதிதாக வந்த விஜயலட்சுமி மற்றும் சரண் சக்தி ஆகியோரால் நிகழ்ந்த சம்பவங்கள், இதனால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் போட்டியின் விதிமுறைகள் பற்றி விஜயலட்சுமி சரமாரியாக எழுப்பிய கேள்விகள் உள்ளிட்டவை நிகழ்ச்சியை பரபரப்பாக்கின.
இந்த நிலையில் விஜே பார்வதி சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டிருந்த நிலையில் இந்த வாரம் எலிமினேட் ஆனார். சர்வைவர் தீவில் இருந்து வெளியில் வந்த பிறகு பார்வதி தற்போது ஒரு புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் முன்பு இருந்ததை விட அதிகம் கருப்பாக மாறி இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.