லெஸ்பியனாக நடிக்கும் பிக்பாஸ் சுருதி... - வெளியானது பர்ஸ்ட் லுக்... - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...!

Tamil Cinema Bigg Boss
By Nandhini Feb 15, 2023 04:41 PM GMT
Report

பிக்பாஸ் ஸ்ருதி லெஸ்பியனாக நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ஸ்ருதி

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 6வது சீசன் ஒளிபரப்பப்பட்டு நிறைவடைந்தது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டவர்தான் ஸ்ருதி பெரியசாமி. இவர் பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இதன் பிறகு, பிக் பாஸ் ஜோடிகள் டான்ஸ் ஷோவிலும் இவர் கலந்துகொண்டார்.

suruthi-periyasamy-bigboss

லெஸ்பியனாக நடிக்கும் பிக்பாஸ் சுருதி

இந்நிலையில், இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் படம் தான் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இந்தத் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இப்படம், ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில் வெளியாகப்போகிறது.

இவர்களின் காதலை இந்த சமூகம் அங்கீகரித்ததா? அல்லது புறக்கணித்ததா? என்பது குறித்தும், சமூகத்தின் எதிர்ப்புகளை மீறி இவர்களின் காதல் என்ன ஆனது? என்பது குறித்தும் விவரிப்பது தான் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே'.

இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் தயாரித்து வருகிறார். இதில், சுருதி பெரியசாமி, நிரஞ்சனா நெய்தியார், அர்ஷத் ஃபராஸ், ஆறுமுக வேல், பிரதீப், நிரஞ்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்திரைப்படத்திற்கு தர்ஷன் ரவிக்குமார் இசையமைத்துள்ளார்.