வயதான முதியவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து கத்தியால் குத்தி கொடூர கொலை!

kill old man Villapuram brutally
By Jon Mar 25, 2021 12:49 PM GMT
Report

வில்லாபுரம் பத்மா தியேட்டர் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து கத்தியால் குத்தி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை ஜெய்ஹிந்த்ந்புரம் வீரகாளியம்மன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா தேவர் மகன் தங்கப்பாண்டி (69).

இவர் மீனாட்சி நகர் பகுதியில் சொந்தமாக பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது பத்மா தியேட்டர் எதிரே உள்ள கற்பக நகரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் கத்தியால் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே தங்கப்பாண்டி உயிரிழந்தார்.

வயதான முதியவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து கத்தியால் குத்தி கொடூர கொலை! | Surrounded Old Man Brutally Stabbed Death

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அவனியாபுரம் போலீஸ் இன்ஸ்பெட்டர் பிரபு தலைமையில் காவல் துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு மதுரை மாநகர் போலீஸ் துணை கமிஷனர் சிவபிரசாத், உதவி கமிஷனர் சண்முகம் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

பின்னர் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? அல்லது வழிப்பறியில் போது நடந்த விபரீதம் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த முதியவருக்கு சிவக்குமார், பழனிக்குமார் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர் .