சூர்யாவுக்கு வில்லனாகும் கதாநாயகன்..யார் தெரியுமா?
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைபடத்தில் அவருக்கு வில்லனாக கதாநாயகன் ஒருவர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வெளியான படங்களில் சூர்யாவிற்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்த படம், சுதா கெங்கரா இயக்கிய சூரரை போற்றி படம்.
இதனைடுத்து இன்னும் பெயரிடப்படாத சூர்யாவின் 40 வது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விரைவில் துவங்க உள்ளது. டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் தான் இப்படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் துவங்கப்பட்டது. மிகப் பெரிய பொருட் செலவில் தயாராக உள்ள இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இமான் இசையமைக்க உள்ளார். இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக, உன்னாலே உன்னாலே படத்தில் ஹீரோவாக நடித்த வினய் நடிக்க உள்ளார்.விரைவில் இது பற்றிய அதிகாரபூர்வமாக வெளியிடப்பட உள்ளது. இதற்கு முன் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்தில் வில்லனாக வினய் நடித்துள்ளார்.
முன்பெல்லாம் பிற மொழி டாப் ஹீரோக்களை தான் தமிழ் படங்களில் வில்லனாக அறிமுகப்படுத்தி வந்தனர். பிறகு தமிழ் படத்தின் முன்னாள் ஹீரோக்களை வில்லனாக்கினர். தற்போது விஜய் சேதுபதி, வினய் என தற்போதுள்ள ஹீரோக்களையே, மற்ற ஹீரோக்களுக்கு வில்லனாக நடிக்க வைத்து வருகின்றனர்.