அன்பை எப்படி கொடுப்பது என்பதை தோனியிடமிருந்துதான் கத்துகிடணும் : தோனியை புகழ்ந்த சூர்யா

dhoni csk suriya dhonilove
By Irumporai Oct 16, 2021 12:38 PM GMT
Report

சூர்யா சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ள ஜெய் பீம் படத்தின் டீசர் நேற்று (அக்டோபர் 16) வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் நடிகர் சூர்யா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது தோனியுடன் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அதில், ரசிகர்களின் அன்பை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று நான் தவித்திருக்கிறேன். ஆனால் அதனைத் தோனி சரியாக செய்து காட்டுவார்.

15 ரன்கள் எடுக்கிறார். ஆனால் அவர் எப்பொழுது அந்த 15 ரன்களை பெறுகிறார் என்பது முக்கியம். 8 வயது குழந்தை அழுகிறது.

உடனே அவர் பந்தில் அவரது கையொப்பம் இட்டு அந்த குழந்தையிடம் விட்டெறிகிறார். அந்த குழந்தை அந்தப் பந்தை பார்த்து மகிழ்கிறது.

அந்த குழந்தையின் வாழ்வில் அந்த தருணம் மறக்க முடியாததாக இருக்கும். 24 படத்தில் அவருடன் செல்ஃபி எடுப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக அவர் அனுமதி அளித்தார். அதற்கு முன் அப்படி நடந்தது கிடையாது.

அந்த விடியோ அளிப்பதற்கு உடனடியாக சம்மதித்தார் அதானால் அவர் கேப்டன் கூல் என்று புகழ்ந்தார்.