ஜோதிகா செய்த காரியம்.. அதனால்தான் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனேன் - ஓபனாக பேசிய சூர்யா!

Suriya Jyothika Viral Video Mumbai Kanguva
By Swetha Oct 30, 2024 10:30 AM GMT
Report

மும்பைக்கு குடிப்பெயர்ந்ததன் காரணம் குறித்து நடிகர் சூர்யா வெளிப்படையாக பேசியுள்ளார்.

சூர்யா

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த `கங்குவா' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. அதனையோட்டி அன்மையில் சூர்யா அளித்த பேட்டி ஒன்றில் மும்பைக்குக் குடிபெயர்ந்த காரணத்தை எடுத்துக் கூறியிருக்கிறார்.

ஜோதிகா செய்த காரியம்.. அதனால்தான் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனேன் - ஓபனாக பேசிய சூர்யா! | Suriya Shares Why His Family Shifted To Mumbai

அதில் அவர் பேசியதாவது, ஜோதிகா தன்னுடைய 18 அல்லது 19 வது வயதில் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்தார். கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் அவர் சென்னையில் இருக்கிறார். 18 ஆண்டுகள் அவர் மும்பையிலும், 27 ஆண்டுகள் சென்னையிலும் இருந்திருக்கிறார்.

அவர் இங்கே என்னுடனும், என் பெற்றோருடனும் இருக்கிறார். தனது கரியரை இங்கே அமைத்துக் கொண்டார். அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு இங்கே சென்னையில் இருக்கிறார்.

முகத்தில்கூட முழிக்க பிடிக்கல; மாமியார் வீட்டோடு பிரச்னை - ஜோதிகா குறித்து பிரபலம் பகீர்!

முகத்தில்கூட முழிக்க பிடிக்கல; மாமியார் வீட்டோடு பிரச்னை - ஜோதிகா குறித்து பிரபலம் பகீர்!

மும்பை

இப்படியிருக்கும்போது 27 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் தனது சொந்த ஊரான மும்பையில் தனது பெற்றோருடன் நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார். எல்லாவற்றையும் தாண்டி, ஓர் ஆணுக்கு என்னென்ன தேவைகள் இருக்கிறதோ, அதேபோல பெண்ணுக்கும் அந்த தேவைகள் எல்லாம் இருக்கிறது.

ஜோதிகா செய்த காரியம்.. அதனால்தான் மும்பைக்கு ஷிஃப்ட் ஆனேன் - ஓபனாக பேசிய சூர்யா! | Suriya Shares Why His Family Shifted To Mumbai

எனக்கு இது மிகவும் தாமதமாக தான் புரிந்தது. அவருக்கும் சுற்றுலா செல்ல வேண்டும், அவருக்கும் நண்பர்களை சந்திக்க வேண்டும், அவருக்கும் பொருளாதார சுதந்திரம் வேண்டும், அவருக்கும் மரியாதை தேவை, எல்லாமே அவருக்கும் தேவை.அப்படியிருக்கும்போது அவர் மட்டும் ஏன் பெற்றோருடன் நேரத்தை செலவிடக்கூடாது?

அவருக்கு பிடித்ததை செய்யக் கூடாது? அப்படியென்றால் அவர் எப்போது இதையெல்லாம் செய்வார் என்ற கேள்வி உண்டு. ஒரு நடிகராக ஜோதிகாவின் வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

அதேபோல சென்னையில் ஒன்றோ, இரண்டோ தான் ஐபி (IB SCHOOLS) பள்ளிகள் உண்டு. மும்பையில் அந்த பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். இந்த காரணங்களுக்காக மும்பையில் இடம்பெயர்ந்தோம் என்று தெரிவித்துள்ளார்.