ஜோதிகாவின் பேச்சை கேட்டு குடும்பத்தினரை பாதியிலேயே கழட்டிவிட்டு சென்ற நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா தனது மனைவி ஜோதிகாவின் பேச்சை கேட்டு சொந்த ஊரை விட்டுவிட்டு மும்பையில் தனிக்குடித்தனம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமணம்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா - ஜோதிகா இவர்கள் சில ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில்,
பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர்.
திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
மும்பையில் குடியேற்றம்
இந்த நிலையில் தற்போது சூர்யா தனது மனைவியுடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தனது குடும்பத்தோடு செட்டில் ஆவதற்காக ரூ.68 கோடி மதிப்பில் பிரம்மாண்ட பிளாட் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
9000 சதுர அடி கொண்ட அந்த பிளாட்டில் கார்டன் மற்றும் கார் பார்க்கிங் வசதிகளும் இருப்பதாக
கூறப்படுகிறது.
ஜோதிகாவின் சொந்த ஊர் மும்பை என்பதால் அங்கு உறவினர்களுடன்
மகிழ்ச்சியாக இருக்க திட்டமிட்டு சூர்யாவை அழைத்துச் சென்று விட்டதாக செய்திகள்
வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சு வாகனத்தில் இடம்பெற்ற அநாகரிக சம்பவம் : தலைதெறிக்க ஓட்டம்பிடித்த சாரதி IBC Tamil

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
