ரசிகர்களை தடுத்து நிறுத்திய சூர்யா - விமான நிலையத்தில் பரபரப்பு!
மகனை புகைப்படம் எடுக்கவேண்டாமென சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
நடிகர் சூர்யா
நடிகர் சூர்யா - ஜோதிகா நட்சத்திர ஜோடிக்கு தியா சூர்யா (15) மற்றும் தேவ் சூர்யா (13) இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், மும்பையில் ஒரு புதிய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியதாகவும், விரைவில் தனது குடும்பத்துடன் நிரந்தரமாக அங்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில், சூர்யா மகன் தேவ்வுடன் மும்பையில் விமான நிலையத்திற்கு சென்றிருந்தார்.
பரபரப்பு
இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது, அவர் தனது மகனை புகைப்படம் எடுக்கவேண்டாம் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர்.
இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வவுனியா விமானப்படை தளத்தை உரிமை கோரும் புலம்பெயர் தமிழர்! பிமலுக்கு எதிராக வலுக்கும் இனவாத கருத்து IBC Tamil

Optical illusion: துல்லியமான கண்பார்வைக்கு Test... இதில் “975” களில் இருக்கும் “973” எங்கே? Manithan
