ஆஸ்கார் விருதினை பெற அமெரிக்கா செல்கிறது ‘ஜெய் பீம்’ படக்குழு
உலக சமூக ஆஸ்கார் விருதினை பெற நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா அமெரிக்கா செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெய் பீம்' படத்திற்காக உலக சமூக ஆஸ்கார் விருதினை பெற நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் அமெரிக்கா செல்விருக்கின்றனர்.
டி.ஜே. ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்து கடந்த தீபாவளி அன்று ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது ஜெய் பீம் திரைப்படம்.
தமிழ் திரையுலகை கடந்து இந்திய அளவில் பேசுபொருளாக மாறி அனைவரது வாழ்த்துக்களையும் ஜெய் பீம் படம் பெற்றது.
இந்நிலையில் மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை அளித்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக ஆர்வலர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுகள் அமெரிக்காவில் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், 11-வது உலகளாவிய பாராளுமன்ற சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்.
அதில் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021-ம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயர நிலையை வெளிப்படுத்தியதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் டி.ஜே.ஞானவேல் உள்ளிட்ட ஜெய் பீம் படக்குழுவினர்
நேரடியாக வந்து விருதுகளை பெற்றுச் செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 'ஜெய் பீம்' படத்திற்காக உலக சமூக ஆஸ்கார் விருதுகளை பெற நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் அமெரிக்கா செல்ல இருக்கிறார்கள்.
வருகிற பிப்ரவரி 19-ம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள இந்த மாபெரும் நிகச்சியில் 'ஜெய் பீம்' படத்திற்கு சிறந்த பதக்கம் வழங்கப்பட உள்ளது.
You may like this,