"சூர்யா ஜோதிகா தயாரிப்பில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு"..பட்டையை கிளப்பும் வீடியோ

Suriya Jyothika Indian actress
By Thahir Sep 15, 2021 09:50 AM GMT
Report

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்துள்ள புதிய படம் 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' என்ற திரைப்படம்.

இப்படத்தை அரிசில் மூர்த்தி இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

"சூர்யா ஜோதிகா தயாரிப்பில் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு"..பட்டையை கிளப்பும் வீடியோ | Suriya Jyothika Indian Actress

பாடகர் கிரிஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது .

மேலும் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வருகிற 24-ந் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா தயாரிப்பில் ஓடிடி-யில் வெளியாகும் 3-வது படம் இதுவாகும், இதற்கு முன்னர் சூரரைப் போற்று, பொன்மகள் வந்தாள் ஆகிய படங்கள் ஓடிடி-யில் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.