திடீரென ஜோதிகா பெயரை நீக்கிய சூர்யா - இருவருக்குள் சண்டையா? - குழப்பத்தில் ரசிகர்கள்
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணத்திற்கு முன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ என பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
தேசிய விருது
சூர்யா தன் மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2020 ஆம் ஆண்டுக்கான 68வது தேசிய விருது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இவர்களது தயாரிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று 5 தேசிய விருதுகளை பெற்று அசத்தி இருக்கிறது.
விருமன் சர்ச்சை
இதனையடுத்து, விரைவில் வெளிவர உள்ள படம் விருமன். கார்த்தி நடித்துள்ள இப்படத்தில் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் ‘மதுர வீரன்’ என்ற பாடலை ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம் ராஜலட்சுமி பாடியிருந்தார். ஆனால், அதை நீக்கிவிட்டு அதிதி ஷங்கர் பாட வைத்து இப்பாடல் வெளியிடப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஜோதிகா பெயர் நீக்கம்
இதனையடுத்து, அடுத்த சர்ச்சையாக, இப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, தனது தயாரிப்பில் இதற்கு முன் வெளியான ‘கார்கி’, ‘ஜெய் பீம்’ போன்ற படங்களில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கும் என்று குறிப்பிடப்படும். ‘விருமன்’ படம் தொடங்கியபோது வெளியிடப்பட்ட போஸ்டர்களில் கூட குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ரிலீஸ் சமயத்தில் வெளியிடப்படும் எந்த போஸ்டரிலும் ஜோதிகாவின் பெயர் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
