‘ஜெய்பீம்’ பட விவகாரம் - சூர்யா, ஜோதிகா மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆனால், அப்படத்தில் இடம்பெற்ற காட்சியில் வில்லன் கதாபாத்திரத்திற்கு குரு என்று பெயர் வைத்ததற்கும், காலண்டரில் வன்னியர் சங்கம் குறிப்பிடப்பட்டிருப்பதற்கும் வன்னியர் சங்கங்களும், பா.ம.க.வும் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கண்டனங்களும் தெரிவித்து வந்தனர்.
மேலும், நடிகர் சூர்யா, அவரது மனைவி ஜோதிகா உள்பட படக்குழுவினர் மீது வன்னியர் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தது. சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்கத்தலைவர் அருள்மொழி இந்த வழக்கினை தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புகார்தாரரின் மனுவின் அடிப்படையில், சட்டத்தை விதிமுறையின் படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வேளச்சேரி ஆய்வாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் உத்தரவு கிடைக்கப்பட்ட 5 வேலை நாட்களில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறி வருகிற 20ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.