கமலின் விக்ரம் படத்தில் ரசிகர்களுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்... கடைசியில் நிகழ்ந்த சம்பவம்
நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படத்தில் ரசிகர்களுக்கு சூப்பரான சம்பவம் ஒன்று காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
#Suriya playing a cameo in #KamalHaasan’s #Vikram ??#LokeshKanagaraj bringing up lot of surprise elements for his guru #Kamal.#Anirudh #VikramFirstSingle #PathalaPathala pic.twitter.com/vAY7BFvuur
— Cinema Calendar (@CinemaCalendar) May 12, 2022
அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படம் ஜூன் 3 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இந்தப்படத்தின் டீசர் மற்றும் கிளிம்ப்ஸ் காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'விக்ரம்' படத்தின் கிளைமாக்சில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மே 15 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ள ‘விக்ரம்’ பட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சூர்யாவும் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.
இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில் கமலும் சூர்யாவும் இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

கருப்பு கொண்டைக்கடலை ஊற வைத்து பச்சையாக சாப்பிட்டால் இந்த நோய் சரியாகும்- யாரெல்லாம் சாப்பிடலாம்? Manithan
