அண்ணா கவலைப்படாதீங்க..! அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் சொன்ன நடிகர்கள் சூர்யா,கார்த்தி
நடிகர் அஜித்தின் தந்தை மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு சென்ற நடிகர் சூர்யா மற்றும் கார்த்தியுடன் சென்று ஆறுதல் கூறினார்.
அஜித் தந்தை உயிரிழப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருவபர் நடிகர் அஜித் இவரது தந்தை சுப்பிரமணியம் கடந்த மார்ச் 24ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.
பக்கவாத பதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது தந்தை மறைவுக்கு திரையுலகினர்,பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். சுப்பிரமணியம் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
நேரில் ஆறுதல்
இந்த நிலையில் அஜித்தின் தந்தை மறைவை அடுத்து நேற்று சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தியுடன் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சந்திப்பின் போது அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.