நான் அவரை கல்யாணம் செய்யணும் திரிஷாவை வெளியேற்றுங்கள் - பரபரப்பை கிளப்பும் சூர்யா
நடிகை திரிஷாவுடன் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாகவும் எனவே லியோ படத்திலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் ஏ.எல்.சூர்யா தெரிவித்துள்ளார்.
திரிஷா
தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா தற்போது லியோ படத்தில் நடித்து வருகின்றார், இந்த நிலையில் திரிஷாவை திருமணம் செய்து கொள்ளபோவதாக ஏ.எல் சூர்யா பரபரப்பை ஏற்படுத்தினார் , இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையினை கிளப்பியுள்ளார். தற்போது சூர்யா அளித்துள்ள பேட்டி ஒன்றில் லியோ படத்திலிருந்து திரிஷாவை வெளியேற்ற வேண்டும்.
சூர்யா சர்ச்சை
ஏனென்றால் நான் அவரை காதலித்துவருகிறேன். எனக்கும் திரிஷாவுக்கும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெறவிருக்கிறது. விஜய்க்கு என் மீது பெரிய பொறாமை இருக்கிறது. நானும் திரிஷா மீது கடும் கோபத்தில் இருக்கிறேன். நாங்கள் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொள்வோம். இப்போது எங்களுக்குள் சின்ன சண்டை என்பதால் நாங்கள் பேசிக்கொள்வதில்லை என்றார்.
ஏ.எல்.சூர்யா தன்னைத்தானே இசையமைப்பாளர், இயக்குநர் என்று கூறிக்கொள்பவர். ஏற்கனவே கடந்த 2006ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் பிரபு என்பவரிடம் நடிகை பத்மப்ரியாவை வைத்து பாரதியார் பாடல்களை ஒளிப்பதிவு செய்துதரும்படி கேட்டு பத்மப்ரியாவின் தொலைபேசி எண்ணை கேட்டும் நச்சரித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மீது புகார் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.