நடிகர் சூர்யாவுக்கு கொரோனா! அனைவருக்குமான அவரின் எச்சரிக்கை பதிவு

movie flim sivakumar
By Jon Feb 08, 2021 04:50 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகரான சூர்யா கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று நலமுடன் இருக்கிறேன் என்று தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தமிழ் திரைப்பிரபலங்கள் பலரையும் தாக்கியுள்ளது. அதன் பின் அதற்கான உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டு அதில் இருந்து அவர்கள் மீண்டு வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கொரோனா’ பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம்.

அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும் என்று குறிப்பிட்டுள்ளார்.